தனது வளர்ப்பு தந்தையை கொன்ற இளம்பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலையன்று 19 வயது இளம்பெண்ணுக்குக்கும் அவருடைய வளர்ப்பு தந்தைக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் 54 வயது வளர்ப்பு தந்தையை அந்த இளம்பெண் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் அவசர சேவையினர் அங்கு விரைந்துள்ளனர்.
ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
இதனடிப்படையில் வளர்ப்பு தந்தையை குத்திக்கொன்றதாக 19 வயது இளம்பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 15 கத்திக்குத்து காயங்கள் அவர் உடலில் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து Toulouse காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.