புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிரான போராட்டம் : இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு

by Editor
0 comments

பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் வேலைநிறுத்த போராட்டத்தில் நான்கரை இலட்சம் பேர் கலந்துக்கொண்டனர் என உள்துறை அமைச்சகமும், 13 இலட்சம் பேர் கலந்துக்கொண்டதாக CGT  தொழிற்சங்கமும் தெரிவித்துள்ளன.

பாரிஸ் மற்றும் மற்ற நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.

பாரிசில் பிற்பகலில் இருந்து, Place de la Bastille-லிருந்து Place d’Italie (XIIIth arrondissement) வரை நடைபெற்ற ஊர்வலத்தில் 300,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.காவல் தலைமையகம் 37,000 பேர் என கணக்கிட்டுள்ளது. பெப்ரவரி 11 அன்று, தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 500,000 ஆகவும், அதிகாரிகளின் கூற்றுப்படி 93,000 ஆகவும் உள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech