இங்கிலாந்து : திருநங்கை கொலை, இருவர் கைது

by Editor
0 comment

16 வயது பிரிட்டிஷ் திருநங்கையான பிரையன்னா கீ கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறார்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் 16 வயது திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 15 வயது இளைஞர் மற்றும் இளம்பெண் என இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூல் அருகே உள்ள குல்செட்டில் (Culchet) உள்ள ஒரு பூங்காவில் கத்தியால் குத்தப்பட்ட பிரையன்னா கீயின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. 

திருநங்கை என்பதால் இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லிவர்பூல், பிரிஸ்டல் மற்றும் லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி அவரது மரணத்திற்கு நீதி கேட்டு போராடினர்.

அவரது குடும்பத்திற்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்ட நிதி திரட்டும் முயற்சியில் புதன்கிழமை அன்று 92,000 பவுண்டுகள் ஸ்டெர்லிங் (103,000 யூரோக்கள்) திரட்டப்பட்டது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech