158
நேற்று (சனிக்கிழமை) மாலை பல்பொருள் அங்காடிக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
Cité Félix-Pyat எனும் இடத்திற்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனே அவர் எந்த அவசர சேவை பிரிவினர் அவர்களை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது>
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இங்கிருந்து 9 எம் எம் துப்பாக்கி தோட்டாக்களை கண்டறிந்துள்ளனர்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.