ரூ.151 கோடி மோசடி நெதர்லாந்து நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

by Editor
0 comment

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த  ‘பல்லார்புர் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ்’ என்ற நிறுவனம் மீது 151 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

காகித தயாரிப்பு நிறுவனமான ‘அவந்தா’ குழுமத்தைச் சேர்ந்த பல்லார்புர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக பி.ஐ.எச். என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த குழுமத்தின் தலைவர் கவுதம் தபார், யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் பண மோசடி வழக்கில் ஏற்கனவே விசாரணை வளையத்துக்குள் உள்ளார்.

கடந்த 2015 செப்டம்பரில் பி.ஐ.எச்., நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ. வங்கி கடனாக வழங்கியது.

இதற்காக, பி.ஐ.எல்.டி. நிறுவனம் 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்பரேட் உத்தரவாதத்தை அளித்தது.

எனினும், 2019 ஏப்ரல் 1-இல், பி.ஐ.எச்., நிறுவனம் வட்டி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறி விட்டது.

இதையடுத்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் அனுமதியோடு, 2019ல் ஐ.டி.பி.ஐ., வங்கி பி.ஐ.எச். நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்தது.

அதில், அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அல்லாமல் வேறு நோக்கங்களுக்காக நிதி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

மேலும், முறைகேடான ஆவணங்கள் வாயிலாக நிதி மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 151 கோடி ரூபாய் அளவுக்கு பி.ஐ.எச். நிறுவனம் மோசடி செய்துள்ளது.

இந்நிலையில், பி.ஐ.எச்., நிறுவனம் 151 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech