உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது 2வது இடத்தில் இந்தியா இருந்தாலும் விரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அங்குள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் காதல் செய்வதற்காக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஏப்.1 முதல் 7 ஆம் தேதி வரை ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இயற்கையை நேசித்து, காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. மேலும் மாணவர்கள் இந்த விடுமுறை பயணம் குறித்த தகவல்களையும், வீடியோக்களையும் உருவாக்குமாறு வீட்டுப்பாடம் வழங்கப்பட்டுள்ளது.