போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காவல்துறை நடத்திய ரப்பர் குண்டு தாக்குதலில் பார்வை பறிபோனவருக்கு 15,000 யூரோக்கள் நஷ்ட ஈடு வழங்க பாரீஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு Mantes-la-Jolie (Yvelines) எனுமிடத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டால் (LBD) துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வலது கண்ணில் படுகாயமுற்ற 19 வயது இளைஞர் ஒருவருக்கு பார்வை பறிபோனது.
காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை வெர்சாய் நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுவித்தது.
பார்வை பறிபோனதற்காக 30,000 € நஷ்ட ஈடு கோரி வழங்கு தொடர்ந்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் பின் மீண்டும் வழக்கு தொடர்ந்த அவர் சார்பாக அவருடைய வழக்குரைஞர் வாதாடினார்.
காவல்துறையின் நடவடிக்கைக்கும் அவருக்கும் தொடர்பில்லை, போராட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் பங்குபெறவில்லை, அவரொரு.நிரபராதி என்று கூறி வெர்சாய் நீதிமன்றம் விடுவித்ததை மேற்கோள் காட்டினார்.
இதை விசாரித்த நீதிபதிகள் அரசு பாதிக்கப்பட்ட இளைஞருக்கு பதினைந்தாயிரம் யூரோக்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தது.