Aquitaine : பிரான்ஸ் உள்துறை அமைச்சரின் உறவினர் காவல் துறையால் கைது

by Editor
0 comment

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின்னுடைய உறவினர் ஒருவரும் Gendarme காவலர் ஒருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அமைச்சருக்கு தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இளம் பெண், காவலராக பணிபுரியும் தன்னுடைய முன்னாள் காதலனிடம், தன்னுடைய தாய், முன்னாள் கணவர் மற்றும் உடன் பணிபுரிபவர் பற்றிய சில தகவல்களை காவல்துறை வசம் இருக்கும் ரகசிய ஆவணங்களிலிருந்து பெற வேண்டும் என்று கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரகசிய தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக திருட்டுத்தனமாக பயன்படுத்திய குற்றத்திற்காக உள்துறை அமைச்சரின் உறவினருக்கு ஐந்தாண்டு வரை சிறை தண்டனையும் 3 லட்சம் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதோடு அவருக்கு உதவியாக இருந்த காவலர் மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குற்ற சம்பவத்திற்கு துணை போனதாக தண்டனையும் வழங்கப்படும்.

அத்துடன் சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினரின் சீருடை அணிந்ததற்காகவும் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech