வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் பதினொரு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் தெற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்றதால், கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி – மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இடி – மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.