சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி “எலி துளை” சுரங்க தொழிலாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 12 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி 17 நாட்களாக தொடர்ந்து வருகிறது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு படையினர், தீயணைப்பு படையினர் ,தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க 6 அங்குல குழாய் அமைத்து அதன்மூலம் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த குழாய் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளவும் மற்றும் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.
தேசிய பேரிடர் மீட்பு குழு படையினர் கூறுகையில் ‘’மீட்பு பணி நடைபெறும் இடத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது’’ என்றனர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் “எலி துளை சுரங்க” பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இயந்திரம் மூலம் துளையிடுவதற்கு சாத்தியம் இல்லாததால், ‘எலி துளை’ நுட்பத்தில் சுரங்கத்தை தோண்ட திட்டமிட்டுள்ளனர்..
இன்னும் 3 முதல் 5 மீட்டர் தூரம் மட்டுமே துளையிடும் வேலை உள்ளதாகவும், அதனை விரைவில் முடித்து சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓரிரு மணி நேரத்தில் இப்பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.