லண்டன் நகர காவல்துறையினரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 47 ஆயிரம் காவல்துறையினரின் புகைப்படங்கள், பெயர்கள், பதவிகள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
காவல்துறைக்கு வாரன்ட் அட்டைகள் வழங்கும் நிறுவனத்தின் கணினி ஊடாக காவல்துறையினரின் அலுவல்பூர்வ கணினிக்குள் புகுந்த ஹேக்கர்கள் இந்த திருட்டை நடத்தியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
‘நிறுவனத்தின் கணினிக்குள் முறைகேடாக நுழைந்தவர்கள் மாநகர காவல்துறையினரின் விவரங்களை திருடியுள்ளனரா என்பதை அந்நிறுவனத்துடன் இணைந்து விசாரித்து வருகிறோ. ஒருவேளை இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று மாநகர காவல்துறையினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகளின் பெயர், பதவிகள், புகைப்படங்கள், ஊதியம், நுழைவனுமதிகள் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே அந்த நிறுவனத்தான் சேமிக்கப்பட்டிருந்தன என்றும், முகவரி, தொலைபேசி எண், நிதி விவரங்கள் எதுவும் அந்நிறுவனத்தால் சேமிக்கப்படவில்லை என்று இலண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இங்கிலாந்தின் தேசிய குற்றத்தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது.