விடுமுறை முகாமில் இருந்த குழந்தைகளை அழைத்துச் சென்ற மினி வேன் பாலத்தின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.
10 முதல் 14 வயதிற்கு உட்பட்ட ஏழு சிறுவர்களை அழைத்துச் சென்ற மினி வேன் ஒன்று நேற்று மாலை 6 மணியளவில் Houeillès என்னும் ஊரில் உள்ள பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உயிர் காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த 12 வயது சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினிவேனை ஓட்டிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும்.
🇫🇷 FLASH – 8 blessés dont 2 en urgence extrême après un accident de minibus qui transportait des enfants à Houeillès. (BFMTV) pic.twitter.com/oLVwUvjqeC
— AlertesInfos (@AlertesInfos) August 25, 2023
தீயணைப்பு வீரர்கள், அவசர சிகிச்சை பிரிவினர், உலகு வானூர்திகள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.