அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 22 பேர் பலி, 16 பேர் காயம்

by Special Correspondent
0 comment

அமெரிக்காவின் மெய்னே நகரில் மூன்று இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்ததோடு, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மெய்ன் (Maine) நகரில் உள்ள லெவிஸ்டன் (Lewiston) எனும் பகுதியில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

அமெரிக்க நேரப்படி புதன் பின்னிரவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஒரே நேரத்தில் உணவகம், விநியோக மையம், மதுபான கூடம், கேளிக்கை விடுதி ஆகிய பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆட்ரோஸ்கோகின் நகர காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் 2 புகைப்படங்களை வெளியிட்டது. 

அதில் அந்த மர்ம நபரின் கையில் துப்பாக்கியுடன் இருப்பது பதிவாகியிருந்தது. 

மேலும், அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையை அணுகுமாறு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கியுடன் இருந்த நபர் ராணுவத்திருக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி அளித்து வந்தவர் என்பதும், அவர் பெயர் ராபர்ட் கார்டு என்பதும் தெரியவந்துள்ளது. 

அவரை தேடப்படும் பயங்கர ஆபத்தான நபராக காவல்துறை அறிவித்துள்ளது. 

40 வயதான ராபர்ட், இந்த ஆண்டில் இரு வாரங்கள் மனநலமருத்துவ மையத்தில் மருத்துவம் பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் இன்னும் காவல்துறையில் சிக்காத நிலையில் மெய்ன் நகரம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு வன்முறைகளுக்கான அமெரிக்க ஆவணக் காப்பகக் குறிப்புகளின் படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25,198 பேர் அமெரிக்காவில் கொல்லப்பட்டுளளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech