மூன்று வாரங்களாக தொடர்ந்து காசா மீது நடக்கும் இஸ்ரேலின் வான் வழி மற்றும் தரை வழித் தாக்குதல்கள், மேலும் தீவிரமடையும் எனக் கருதப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தை முற்றிலுமாக அழிக்காமல் விடமாட்டோம் என்ற உறுதியோடு இஸ்ரேல் தரைவழி தாக்குதலை காசாவில் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கும், குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனத்தில் 3195 சிறுவர்கள், 1863 பெண்கள் உட்பட 7700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் சூழலில், இஸ்ரேலிய படைகள் இரண்டாம் கட்ட போரை தொடங்கிவிட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
‘காசா போரின் இரண்டாம் கட்டத்தை இஸ்ரேலிய படைகள் தொடங்கி விட்டன. இந்த போர் நீண்டதாகவும் இன்னும் கடினமானதாகவும் இருக்கும். அதேபோல் பணயக்கைதிகளை மீட்டுக் கொண்டுவருவது உட்பட பல இலக்குகளும் தெளிவாக இருக்கின்றன’ என்று பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதலில் தொலைத்தொடர்பிலிருந்து காசாவின் வடக்கு பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் போர் அத்துமீறல்கள் குறித்து உண்மையான நிலவரங்கள் வெளியுலகிற்கு தெரியாத சூழல் உருவாகலாம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு குழு கவலை தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை துருக்கிய அதிபர் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், துருக்கியிலுள்ள இஸ்ரேல் தூதுவரை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது நாட்டு தூதுவர்களுக்கு வெளியேறும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தனது x பதிவில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்கள் வாட்சப் மற்றும் டெலிகிராம் சேனல்களில் இணைந்திடுங்கள்.
Whatsapp Channel : JOIN
Telegram Channel : JOIN