குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் தாய் கைது

by Special Correspondent
0 comment

குழந்தையை பெற்றெடுத்து குப்பைத் தொட்டியில் வீசிய பதினெழு வயது சிறுமியொருவருக்கு கொலை முயற்சி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக குழந்தையை பெற்றெடுத்த மயோத்தை (Mayotte) சேர்ந்த மைனர் பெண் ஒருவர் பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியதால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை ஜாமீனில் விடுவிக்க கோரி அளிக்கப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி ரேன்னில் (Rennes) Sarah-Bernhardt மாவட்டத்தில் நோவா ப்ரியாக் எனும் பதினேழு வயது பெண் தனியொரு ஆளாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

பிறந்த குழந்தையை வீட்டின் அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் வீசியுள்ளார்.

குழந்தையின் அழுகுரல் கேட்ட அக்கப்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த அவசர மீட்பு பிரிவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையின் தலை ஓட்டில் சிறிய விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

3.370 கிலோ எடையுள்ள அந்த குழந்தையின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அந்த குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர், பாதுகாத்த செவிலியர், மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆகியோரின் பெயரை சேர்த்து ‘நோவா ப்ரையாக் அல்பான்’ (Noah Briac Alban) என்று பெயரிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ‘நான் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பை போடும் பையில் போட்டு வீட்டின் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டேன்’ என்று அக்குழந்தையின் தாய் கூறியுள்ளார்.

தான் அவசரப்பட்டு விட்டதை அக்குழந்தையின் தாய் உணர்ந்துவிட்டதாக அப்பெண்ணின் வழக்குரைஞர் கூறியுள்ளார். 

இருப்பினும், இவ்வழக்கு மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாலும், தாய் மைனர் பெண் என்பதாலும் அவரை விடுதலை செய்வதில் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் தந்தை விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரேன் பல்கலைக்கழக மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவ கண்காணிப்பில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech