துப்பாக்கி முனையில் நகைக்கடை கொள்ளை : மூன்று பேர் கும்பல் கைவரிசை

by Editor
0 comment

வணிக வளாகத்தில் உள்ள பிரபல நகைக்கடைக்குள் புகுந்து மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்துள்ளது.

நேற்று மாலை ஷேலில் (Chelles (Seine-et-Marne) உள்ள பிரபல ஹிஸ்துவார் தெ ஓர் (Histoire d’Or) நகைக்கடைக்குள் புகுந்த முகமூடியணிந்த நபர்கள் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

பலர் கண் முன்னே நடந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் நகைக்கடையிலிருந்த கண்ணாடிகளை உடைத்து நகைகளை கொள்ளையடித்து காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளது.

இது பற்றி தகவலறிந்து வந்த காவல்துறையினர் கொள்ளைச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech