சேன் சாந்தெனியைச் சேர்ந்த Pierrefitte-sur-seine-இல் இளைஞர் ஒருவர் நடுவீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்டத்தில் அவருக்கு தோளிலும் தொடையிலும் காயம் ஏற்பட்டது. அவருக்கு அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவ உதவி அளித்தும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
காரில் வந்த ஒரு கும்பல் அவரை குறி வைத்து தாக்கியுள்ளதும், பல முறை தோளிலும் தொடையிலும் ஈய குண்டுகளால் சுடப்பட்ட காயங்கள் இருந்ததும், அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘பழி வாங்கும் நோக்கோடு செய்யப்பட்ட கொலை’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.