சான்-தெனியில் (Saint-Denis) 23 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24, 2023) மாலை 6 மணியளவில், சான்-தெனி நகரத்தின் மையப்பகுதிற்கு மிக அருகில் இக்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது எட்டு முறை வெடி சத்தம் கேட்டதாக அப்பகுதியிலிருந்தவர்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர் பல முறை மார்பில் சுடப்பட்டுள்ளார். கொலை வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
சான் தெனி பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெறுவது முதல் முறை அல்ல. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் யூஜின் பொத்தியர் வீதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது ஒருவர் படுகாயமடைந்தார்.