Saint-Ouen-னில் உள்ள நகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுமி அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Saint-Ouen-யில் ( Seine-Saint-Denis ) உள்ள Auguste-Delaune நகராட்சி நீச்சல் குளத்தில் ஒரு சிறுமிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை அவசர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மூன்று அல்லது நான்கு வயதுடைய அக்குழந்தை நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போது உடல்நலனில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய அச்சிறுமி ஒரு நிமிடத்திற்கும் மேல் நீருக்குள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவ்விடத்திற்கு வந்த அவசர சேவையினர் குழந்தையை மீட்டு அவருக்கு செயற்கை சுவாசமும், இதயம் இருக்கும் பகுதியை அழுத்தி சுவாசத் தூண்டலும் அளித்தனர். மேலும் அவசர நிலையில் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
அச்சிறுமியின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.