அமெரிக்காவில் அம்பேத்கருக்கு 19 அடி உயர சிலை

by Editor
0 comment

அமெரிக்காவின் மேரிலெண்டின் அக்கோகீக் நகரத்தில் சமத்துவத்தின் சிலை எனப்படும் 19 அடி அம்பேத்கர் சிலை அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிறுவப்படவுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளரான டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் உயரமான சிலை இந்தியாவிற்கு வெளியே, மேரிலெண்டில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட்டவுள்ளது என அதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

சமத்துவத்தின் சிலை என பெயரிடப்பட்டுள்ள 19 அடி சிலை, வாஷிங்டனிலிருந்து ஏறத்தாழ 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேரிலெண்டின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச நிலையத்தின் (AIC) ஒரு பகுதியாக 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது.

இந்தியாவிற்கு வெளியே நிறுவப்படும் பாபா சாகேப் சிலைகளில் இது பெரியது எனவும் அம்பேத்கர் நினைவிடத்தின் ஒரு பகுதியாக இது கட்டப்பட்டுள்ளது எனவும் AIC குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 14,1891 ல் பிறந்த பாபா சாகேப் என பிரபலமாக அழைக்கப்படும் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரைவு குழுவின் தலைவராக இருந்தவர்.

சுதந்திரத்திற்கு பின், பிரதம மந்திரி ஜவர்ஹலால் நேருவின் முதல் மந்திரி அவையில் சட்டம் மற்றும் நீதி அமைச்சராக பதவி வகித்தார்.

தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் மிக முக்கிய பங்காற்றினார்.

டிசம்பர் 16,1956 ல் இறந்த அம்பேத்கர் அக்டோபர் 14 ஆம் தேதி புத்த மதத்தை தழுவினார். அம்பேத்காரியவாதிகளால், தம்ம சக்கர பரிவர்தன் என கொண்டாடப்படும் அதே நாளில் தான் சமத்துவத்தின் சிலை மேரிலெண்டில் திறக்கப்பட்டவுள்ளது.

குஜராத்தின் சர்தார் சரோவர் அணையின் நர்மதா தீவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமையின் சிலையை வடிவமைத்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் ராம் சுத்தார் அவர்களால் இச்சிலை உருவாக்கப்படவுள்ளது.

மிகப்பெரிய எண்ணிக்கையில் அம்பேத்காரிய இயக்கங்களின் பிரதிநிதிகளும், அம்பேத்கரின் தொண்டர்களும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்து இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AIC ன் கூற்றுப்படி, இந்த நினைவிடம் பாபா சாகேபின் செய்திகளையும் போதனைகளையும் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் அடையாளமாகவும் இது விளங்கும்.

அக்டோபர் 14 ஆம் தேதி சிலை திறப்பு விழாவில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech