குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பத்தில் நான்கு குழந்தைகள் இடமின்றி அவதிப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அரசின் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் இடப்பற்றாக்குறையினாலும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள போதுமான ஊழியர்கள் இல்லாததாலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இச்சிக்கலை சமாளிக்க 5 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதம மந்திரி எலிசபெத் பொர்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்று வயதுக்கும் குறைவான வயதுடைய 2.2 மில்லியன் குழந்தைகளுக்கு குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் 1.3 மில்லியன் இடங்களே இருந்ததாக UFC Que-Choisir எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் வகையில், பத்தில் நான்கு குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் இடமின்றி தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
பல பெற்றோர்கள் வேறு வழியின்றி குழந்தைகளை பார்த்துக்கொள்வதாகவும், பாதி பேர் தங்களின் பெற்றோர்களை வைத்து நிலைமையை சமாளிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சேன் சான் தெனியில் (Seine-Saint-Denis) 100 குழந்தைகளுக்கு 32 இடங்களே இருப்பதாகவும், பாரீசில் 100 குழந்தைகளுக்கு 4.6 இடங்களே இருப்பதாகவும், பிரான்சின் தென் பகுதியை விட மேற்கு பகுதி மேம்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.