பிள்ளைகளை காப்பாற்ற முயன்ற தாய் நீரில் மூழ்கி பலி

by Editor
0 comment

நீர்நிலையில் மூழ்கிய தன்னுடைய இரு குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தாய் ஒருவர் ஆழமான பகுதியில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பிரான்சின் அல்சேஸ் (Alsace) மாநிலத்தில் Mulhouse அருகே நீந்துவதற்காக மக்கள் பயன்படுத்தும் நீர்நிலையில் நீச்சல் தெரியாத இரு குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர்.

ஆழமான பகுதியில் சிக்கியதால் கூச்சலிட்ட குழந்தைகளை கண்ட அவர்களின் தாய், உடனடியாக நீரில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவர், ஆழமான பகுதிக்கு நிலைதடுமாறி சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக அங்கு விரைந்த அவசர மீட்பு பிரிவினர் அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆறு மற்றும் பன்னிரெண்டு வயதான குழந்தைகள் தப்பி கரை சேர்ந்த நிலஈயில், அவர்கள் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் அவசர மீட்பு பிரிவினரின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் அந்த நீர்நிலையில், கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி தான் கண்காணிப்பு பணிகள் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech