பிரான்சில் 1200 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தின் படி ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தின்படி ஓய்வூதிய பயனாளிகள் குறைந்தது 1200 யூரோக்கள் பெறும் வகையில் இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சுமார் 100 யூரோக்கள் வரை ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தளவு ஓய்வூதியம் பெறும் சுமார் 1.7 மில்லியன் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.அவர்களில் 7 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு முதலே உயர்த்தி வழங்கப்படும் என தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோரின் பணி நாட்கள், ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஓய்வூதிய உயர்வு வழங்கப்படுகிறது.
புதிதாக ஓய்வு பெறுவோரு 33 யூரோக்களும், ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு 60 யூரோக்களும் ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
இந்த தொகையை பெற ஓய்வூதியதாரர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை, இது தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும்.