பிரான்சின் அராஸ் நகரத்தில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதே பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து லிசே கம்பெட்டா உயர்நிலைப்பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு எதிரேயுள்ள மைதானத்தில் திரண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இதே பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவர் 20 வயது இளைஞரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிகழ்வினை கண்டித்த பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன், ‘இதுவொரு காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமிய பயங்கரவாத செயல்’ என்று விமர்சித்துள்ளார்.
இச்சம்பவங்களையடுத்து பிரான்சில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.