பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கைதான வெளிநாட்டவர்களை வெளியேற்ற பிரான்ஸ் முடிவு

by Editor
0 comment

பிரான்சில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதான வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற பிரெஞ்சு அரசு முடிவு செய்துள்ளது.

எந்தெந்த வெளிநாட்டவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க பிரெஞ்சு அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

பிரான்சின் அராஸ் நகரத்தில் இஸ்லாமிய தீவிரவாத தொடர்புள்ள முன்னாள் மாணவர் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, பிரான்ஸ் தனது பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில், எந்தெந்த வெளிநாட்டவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தீர்மானிப்பதற்காக பிரெஞ்சு அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

வெளியேற்றும் நடைமுறையில் தோல்விகள் ஏற்படாதவாறு நடைமுறைகளை மேற்கொள்ள, அவர்களின் வழக்கு ஆவணங்களை சரிபார்க்குமாறு உள்ளூர் அதிகாரிகளை அதிபர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

பயங்கரவாத தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் அனைத்து வழக்குகளையும் விரிவாக ஆய்வு செய்ய அவர்களுக்கு 48 மணிநேரம் வழங்கப்பட்டுள்ளது.

“வெறுப்பு மற்றும் பயங்கரவாத சித்தாந்தங்களை ஆதரிப்பவர்கள் அனைவரையும் எதிர்த்து பிரான்ஸ் நிற்க வேண்டுமென மக்ரோன் விரும்புகிறார்” என பிரெஞ்சு ஆலோசகர் ஊடகங்களிடம் கூறினார்.

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானின், காகசசிலிருந்து வரும் இளைஞர்கள் மேல் சிறப்பு கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு சமூகத்தையும் அவமானப்படுத்த முயற்சிக்கவில்லை என்று அரசு கூறிய நிலையில், இப்பொழுது நடந்த தாக்குதலில் ஆசிரியரை கொன்றவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியை கொன்றவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள்.

உக்ரைன் போரினால் தடைபட்டிருந்த ‘நாடு கடத்தல்களை’ மீண்டும் தொடர்வதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர உள்ளதாக தர்மனின் கூறியுள்ளார்.

பிரான்சில் ரஷ்யர்களின் மேல் சுமார் அறுபது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் செசனியாவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் ஆபத்தானவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech