இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுவதால் இரண்டுஆவது நாளாக சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
படத்தை ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது ஆப்பரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்று பெயரிடப்பட்டராணுவ நடவடிக்கை இந்திய ராணுவம் அதிரடியாக மேற்கொண்டது.
இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் விமான சேவைகளும் குறைக்கப்பட்டன.
நேற்று ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அகாஸா ஏர் உள்ளிட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வந்த விமானப்போக்குவரத்தை ரத்து செய்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விமான சேவையை ரத்து செய்துள்ளன. மேலும் 25 விமான நிலையங்களும் மே 9 வரை மூடப்பட்டன.
விமான நிலையங்களின் பட்டியல் :
1. சண்டிகர் (Chandigarh)
2. ஸ்ரீநகர் (Srinagar)
3. அம்ரிஸ்டர் (Amritsar)
4. லூதியானா (Ludhiana)
5. பந்தர் (Bhuntar)
6. கிஷன்கார்க் (Kishangarh)
7. பாட்டியாலா (Patiala)
8. சிம்லா (Shimla)
9. ககள் (Gaggal)
10. பட்டிண்டா (Bhatinda)
11. ஜெய்சல்மர் (Jaisalmer)
12. ஜோத்பூர் (Jodhpur)
13. பிகானேர் (Bikaner)
14. Halwara (ஹல்வாரா)
15. Pathankot (பதான்கோட்)
16. Jammu (ஜம்மு)
17. Leh (லே)
18. Mundra (முந்த்ரா)
19. Jamnagar (ஜாம் நகர்)
20. Rajkot (ராஜ்கோட்)
21. Porbandar (போர்பந்தர்)
22. Kandla (கண்டலா)
23. Keshod (கேஷோத்)
24. Bhuj (புஜ்)
25. Thoise (தொய்ஸ்)
இண்டிகோ விமான நிறுவனம் கிட்டத்தட்ட 165 விமானங்களை ரத்து செய்துள்ளது. ‘வான்வழி தடங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அரசு தெரிவித்துள்ளதன்படி பல்வேறு விமான நிலையங்களில் இருந்து பறக்கவிருந்த சுமார் 165 இண்டிகோ விமானங்கள் நாளை (10 மே) காலை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு விமான கட்டணத்தை முழுவதுமாக திருப்பியளிப்பதாக கூறியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதில் நியூயார்க் (New york), அல்மடி {Almaty), டோரன்டோ (Toronto) மற்றும் மோன்ட்ரியல் (Montreal) என நான்கு பன்னாட்டு விமானங்களும் அடங்கும்.
வெளிநாட்டு நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களும் தங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
பல உள்நாட்டு விமான நிறுவனங்கள், ரத்து செய்யப்பட்ட தங்கள் விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் கட்டணமின்றி வேறு தேதிகளுக்கு பயணச்சீட்டை மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணச்சீட்டுக்கான முழு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளன.