நீண்ட நாட்களாக போதைப்பொருள் கைமாற்றும் மையமாக செயல்பட்டு வந்த இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டு நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Villeneuve-Saint-Georges ( Val-de-Marne ) நகரில் போதைப் பொருள்களை கைமாற்றும் மையப்புள்ளியாக ஒரு இடம் செயல்பட்டு வருவதாக வந்த தகவலைடுத்து அவ்விடத்தை கடந்த சில மாதங்களாக காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்ட காவல் துறையினர் அவ்விடத்திற்கு அதிரடியாக புகுந்து காவல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
உள்ளூர் காவல் துறையும் காவல்துறையின் குற்றச்சாட்டு பிரிவும் இணைந்து இந்த காவல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தில் இருந்து 170 போதை மாத்திரைகள், ஐந்து கஞ்சா பிசின்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட போதை பொருட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும், போதை பொருட்களை இடைப்போட பயன்படுத்திய எடை மானிகளையும் கைபேசிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.