பிரான்சின் A15 நெடுஞ்சாலையில் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) இரு வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
நெடுஞ்சாலையில் கார் மற்றும் வேன் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி வேன் ஓட்டுநர் துப்பாக்கியை எடுத்து காரை நோக்கி பலமுறை சுட்டுள்ளார்.
இதில் கார் ஓட்டுனருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை.
காரின் ஓட்டுனர் உடனடியாக காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தார். அதோடு சம்பவத்தை அவர் தன்னுடைய ஃபோனில் பதிவு செய்திருந்ததால் அதனை வைத்து காவல்துறையினர் அந்த வேனை கண்டுபிடித்துள்ளனர்.
38 வயதான அந்த வேன் ஓட்டுனரை அவருடைய வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர் வீட்டிலிருந்து 20 கை துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
அவரை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.