Wednesday, April 22, 2026

Aulnay-sous-Bois: காவல்துறையினரை காரில் தரதரவென இழுத்துச்சென்ற ஓட்டுனர்

by Editor
0 comments

காவல்துறை சோதனை நடத்திக்கொண்டிருக்கும்போதே திடீரென்று காரை இயக்கியதில் இழுத்துச் செல்லப்பட்ட இரு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

விடியற்காலையில் ஒரு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினர் சோதித்துக் கொண்டிருக்கும் போது அந்த நபர் திடீரென்று காரை இயக்கி ஓட்ட தொடங்கியுள்ளார். இதில் காரை சோதித்து கொண்டு இருந்த இரண்டு காவலர்களும் சுமார் 10 மீட்டர் தொலைவிற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காவல்துறையினரின் தீவிரத்தேடுதல் வேட்டையில், அந்த கார் சிறிது நேரத்திலேயே Montgeron (Essonne) எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டிய அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech