ஐஇபி எனும் வல்லுநர் அமைப்பான பொருளியல், அமைதிக் கழகம் உலகின் அமைதியான நாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து இவ்வாண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15-வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டிலிருந்து ஐஸ்லாந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.
மேலும், டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா, சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
2022ஆம் ஆண்டில் 10வது இடத்தைப் பிடித்திருந்த சிங்கப்பூர், நான்கு இடங்கள் முன்னேறியிருக்கிறது.
முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளன.
உலகளவில் ஐரோப்பா மிகவும் அமைதியான பகுதி என்று கூறப்படுகிறது. அதே வேளை, ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆசிய நாடுகள் தான் பட்டியலின் முதல் பாதியில் இடம்பிடித்துள்ளன.