பிரான்சில் நடைபெற்று வந்த கலவரம் பெருமளவு குறைந்துள்ளதால், கலவரங்களினால் சேதமடைந்தவற்றை வேகமாக மீள்கட்டமைக்க அவசர சட்டங்கள் உருவாக்கப்படும் என்று பிரான்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கலவரங்களின் போது பாதிக்கப்பட்ட 220 நகரங்களின் தலைவர்களை அவர் இன்று சந்தித்தார்.
‘கலவரச்சூழல் முடிந்துவிட்டது. இனி, நிரந்தர அமைதியை நோக்கி பயணிப்போம்’ என்று கூறியுள்ளார்.
நேற்றிரவு மட்டும் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டின் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட லே-ஹே-லெ-ரோஸ் (L’Haÿ-les-Roses) நகரமன்ற தலைவருக்கு ஆதரவாக பல்வேறு நகரங்களில் நேற்று அமைதி ஊர்வலங்கள் நடைபெற்றன.
கலவரங்களில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.