பாரிஸ்: உயர்கல்விக்காக பிரான்ஸ் சென்ற சென்னையைச் சேர்ந்த தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முகேஷ்நாத் கோபிநாத். பிரான்ஸ் நாட்டிலுள்ள NEOMA பிசினஸ் ஸ்கூலில் (Reims) உயர்கல்வி பயின்று வந்தார்
அண்மையில் அவர் காணாமல் போனதாக தேடப்பட்ட நிலையில், அவருடைய அறையில் முகேஷ்நாத் திடீரென உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது மரணம் குறித்த செய்தி அவருடைய குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாணவரின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே மகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தற்போது முகேஷ்நாத்தின் உடலை முறைப்படி தாயகம் கொண்டு வந்து, இறுதிச்சடங்குகளைச் செய்ய பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதால் உதவி தேடி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவ விரும்புகிறவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் நன்கொடையளித்து உதவலாம்…
👉 Help us bring Mukeshnath home to India