156
சர்செல்லில் Henru-Dunant எனும் பள்ளி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 17 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள்.
புதன்கிழமை அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் பள்ளியின் வாயில் கதவும், ஜன்னலும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த சந்தேக நபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கதவை உடைத்து உள்ளே செல்ல அவர்கள் முயலவில்லை, குளிர்கால விடுமுறைக்கு பின் வரும் மார்ச் ஆறாம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.