இல் தே பிரான்சின் மாவட்டங்கள் Pollen Allergy எனப்படும் மகரந்த துகள் ஒவ்வாமையால் கடுமையாக பாதிக்கப்படும் என NABMN எனும் அமைப்பு அதன் அண்மை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இல்-தெ-பிரான்சின் மாவட்டங்கள் ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. காற்று இல்லாததாலும், வசந்தகாலத்தின் முன்கூட்டிய வருகையாலும், இந்த ஒவ்வாமை ஆபத்து மிக அதிகமாக உள்ளது.
மிகவும் மிதமான வெப்பநிலை மரங்கள் பூக்க சாதகமாக இருக்கும். இதனால் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருக்கும், இது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகளை பாதிக்கும். தர்போது, ஹேசல்நட் மரங்கள், ஆல்டர்கள் அல்லது ஆஷ் மரங்கள் கூட இந்த மகரந்த ஒவ்வாமையை உருவாக்குகின்றன.
ஆடைகளை வீட்டிற்கு வெளியே துவைத்து காயப்போடவேண்டாம் என்றும், வெளியே அதிகம் உலாவுவது மகரந்த தாக்கத்தை அதிகப்படுத்தும் என்றும் காற்று கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மாலை வேளையில் தலைக்கு குளித்து தலைமுடியை நன்கு அலசவும், தினம் உடைகளை மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.
இன்னும் சில நாட்களில் மழை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் மகரந்த துகள் ஒவ்வாமை உள்ளவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.