Saint-Jean-de-Luz (Pyrénées-Atlantiques) -ல் உள்ள ஒரு பள்ளியில் 53 வயதான ஸ்பேனிஷ் ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
காலை 10 மணியளவில், Pyrénées-Atlantiques பகுதியில் உள்ள Saint Thomas d’Aquin என்ற கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வகுப்பறையின் கதவை மூடிய அந்த மாணவன், தன் பையிலிருந்த கத்தியால் 53 வயதான ஆசிரியரின் நெஞ்சில் குத்தியுள்ளான். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்த அவசர சேவை ஊழியர்கள் ஆசிரியரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு பள்ளி தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் அம்மாணவனை கைது செய்துள்ளனர்.
எதற்காக அவர் ஆசிரியரை கொன்றார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. அம்மாணவருக்கு வயது 16.
பிரான்சில் கடந்த நாற்பதாண்டுகளில் பள்ளிகளுக்குள் மட்டும் 12 ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.