காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்லும்போது பசு மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
இறந்த காவலர் இராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இருப்பினும், காவல் நிலையத்தில் இருப்பு காவலராக பணியாற்றி வந்துள்ளார். 62 வயதான அந்த படைப்பிரிவு காவலர் அன்று காலை வழக்கம்போல தன்னுடைய காவல் நிலைய பணிக்கு தனது இரு சக்கர ஊர்தியில் கிளம்பியுள்ளார். அந்த கிராமத்தின் சாலை வழியாக சென்றுக்கொண்டிருக்கும்போது அங்கு திரிந்துக்கொண்டிருந்த ஏதேனும் ஒரு பசு மாட்டின் மீது எதிர்பாராவிதமாக மோதி அவர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அவசர சேவையினர் தெரிவித்துள்ளனர்.
Aigrefeuille-sur-maine (Loire -Atlantique) எனும் ஊரில் இந்த சம்பவம்
நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.