உக்ரைன் போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சு ஊடகவியலாளருக்கு பிரான்சின் உயரிய விருது !

by Editor
0 comment

இரஷ்ய குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு ஊடகவியலாளருக்கு பிரான்சின் Legion de Honor விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் BFMTV என்ற பிரெஞ்சு தனியார் ஊடகத்திற்காக உக்ரைனுக்கு செய்தி சேகரிக்க சென்ற Frédéric Leclerc-Imhoff என்ற ஊடகவியலாளர் மக்களை போர்க்களத்திலிருந்து மீட்கும் போக்குவரத்து சேவையை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பேருந்தின் பின்னால் சென்றுக்கொண்டிருந்தபோது அவர்களது ஊடக வாகனத்தின் மீது இரஷ்ய இராணுவம் குண்டு வீசி தாக்கியதில் கொல்லப்பட்டார். அவருடன் வந்தவர்கள் காயமடைந்தனர். அவருக்கு வயது 32.

அவருடைய உயிர் தியாகத்தை போற்றும் வகையில் இறப்பிற்கு பிறகான விருதினை வழங்குவதாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரான்சின் பண்பாட்டு துறை அமைச்சர் பிரெஞ்சு தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யா போர் துவங்கியதிலிருந்து இதுவரை 8 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதும் 19 பேர் காயமடைந்திருப்பதும் பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கான அமைப்பான RSF தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech