Prunelli-di-Fiumorbu நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், தேடப்பட்டு வந்த கொலையாளி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தில் 53 வயதுடைய ஒரு ஆணும், 24 வயதுடைய ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கொலையாளி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த ஆண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அப்பெண்ணுக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அந்த பெண் இறப்பதற்கு முன் கொலையாளி பற்றிய அடையாளங்களையும், தகவல்களையும் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொலைச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை உடனடியாக கைது செய்த காவலர்கள், அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.