பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் செய்த சிறந்த சாதனைகளுக்காக வழங்கப்படும் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளுக்கு (Pravasi Bharatiya Samman Awards) வெளிநாடுகளில் வசிக்கும் 27 இந்தியர்கள் இந்திய அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் மற்றும் இந்திய வம்சாவழி இந்தியர்களின் சாதனைகளை போற்றும் வகையில் இந்திய அரசு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. அதன்படி, 27 வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜனவரி 8 முதல் 10 வரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும் 17வது பிரவாசி பாரதிய விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOs) அல்லது அவர்களால் நிறுவப்பட்டு நடத்தப்படும் நிறுவனங்கள்/அமைப்புகளுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளாக இவ்விருதுகள் பார்க்கப்படுகிறது.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல்
நாடு | பெயர் | துறை |
ஆஸ்திரேலியா | ஜெகதீஷ் சென்னுபதி | அறிவியல் & தொழில்நுட்பம்/ கல்வி |
பூட்டான் | சஞ்சீவ் மேத்தா | கல்வி |
பிரேசில் | திலீப் லவுண்டோ | கலை & கலாச்சாரம்/கல்வி |
புருனே | அலெக்சாண்டர் மாலியாக்கல் ஜான் | மருத்துவம் |
கனடா | வைகுண்டம் லட்சுமணன் | சமூக நலன் |
குரோஷியா | ஜோகிந்தர் சிங் நிஜ்ஜார் | கலை & கலாச்சாரம்/கல்வி |
டென்மார்க் | ராம்ஜி பிரசாத் | தகவல் தொழில்நுட்பம் |
எத்தியோப்பியா | கண்ணன் அம்பலம் | சமூக நலன் |
ஜெர்மனி | அமல் குமார் முகோபாத்யாய் | சமூக நலன்/ மருத்துவம் |
கயானா | முகமது இர்ஃபான் அலி | அரசியல் /சமூக நலன் |
இஸ்ரேல் | ரீனா வினோத் புஷ்கர்ணா | வணிகம்/சமூக நலன் |
ஜப்பான் | மக்சூதா சர்ஃபி ஷியோதானி | கல்வி |
மெக்சிகோ | ராஜகோபால் | கல்வி |
போலந்து | அமித் கைலாஷ் சந்திர லத் | வணிகம்/சமூக நலன் |
காங்கோ குடியரசு | பர்மானந்த் சுகுமல் தஸ்வானி | சமூக நலன் |
சிங்கப்பூர் | பியூஷ் குப்தா | வணிகம் |
தென்னாப்பிரிக்கா | மோகன்லால் ஹீரா | சமூக நலன் |
தெற்கு சூடான் | சஞ்சய்குமார் சிவாபாய் படேல் | வணிகம்/சமூக நலன் |
இலங்கை | சிவகுமார் நடேசன் | சமூக நலன் |
சுரினாம் | தேவன்சந்திரபோஸ் ஷர்மன் | சமூக நலன் |
சுவிட்சர்லாந்து | அர்ச்சனா சர்மா | அறிவியல் & தொழில்நுட்பம் |
டிரினாட் & டொபாகோ | பிராங்க் ஆர்தர் சீபர்சாட் | சமூக நலன் / கல்வி |
சவுதி அரேபியா | சித்தார்த் பாலச்சந்திரன் | வணிகம்/சமூக நலன் |
இங்கிலாந்து | சந்திரகாந்த் பாபுபாய் படேல் | மூடகம் |
அமெரிக்கா | தர்ஷன் சிங் தலிவால் | வணிகம் / சமூக நலன் |
அமெரிக்கா | ராஜேஷ் சுப்ரமணியம் | வணிகம் |
உஸ்பெகிஸ்தான் | அசோக் குமார் திவாரி | வணிகம் |