ஐரோப்பாவிலேயே முதல் முறையாக ஸ்பெயினில் சம்பளத்துடன் கூடிய ‘மாதவிடாய் விடுப்பு’

by Editor
0 comment

கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் முன்மொழிவிற்கு (மசோதா) மீது ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஸ்பெயினின் இடதுசாரி அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த மசோதா முதல் வாக்கெடுப்பில் 190 வாக்குகள் ஆதரவாகவும், 154 எதிராகவும் பெற்றுள்ளது. ஐந்து பேர் வாக்களிக்கவில்லை. 

கடந்த மே மாதம், இந்த மசோதா ஸ்பெயின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளதால், அடுத்து செனட்டுக்கு செல்லும். ஒருவேளை மாதவிடாய் விடுப்பு மசோதாவில் ஏதேனும் மாற்றப்பட்டால், அது சட்டமாக மாறுவதற்கு முன்பு மற்றொரு வாக்கெடுப்புக்காக மீண்டும் கீழ் சபைக்கு அனுப்பப்படும்.

உலக நாடுகளில் ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஜாம்பியா உட்பட ஒரு சில நாடுகளில் மட்டுமே மாதவிடாய் விடுப்பு தற்போது வழங்கப்படுகிறது.

Spain Equality Minister- Photo d'archives, AFP
Spain Equality Minister- Photo d’archives, AFP

ஸ்பானிஷ் பெண் நோயியல் மற்றும் மகப்பேறியல் சங்கம், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாதவிடாயின் போது கடுமையான வலியால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

2004 இல் குடும்ப வன்முறைக்கு எதிரான ஐரோப்பாவின் முதல் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் தீவிர செயலாற்றுவதோடு ஸ்பெயின் ஒரு நல்ல முன் மாதிரியாகவும் திகழ்கிறது. பெண்ணுரிமைகளின் அடிப்படையில் ஸ்பெயின் நாடு ஐரோப்பாவில் ஒரு முக்கிய அளவுகோலாகவும் கருதப்படுகிறது. 

பெண்ணியவாத அரசு என்று கூறிக்கொள்ளும் சான்செஸ் அரசாங்கம் ஆண்களை விட அதிகமான பெண்களைக் கொண்டுள்ளது. அதன் தற்போதைய அமைச்சரவையின் ஆண்களை விட அதிகமான பெண்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஸ்பெயின் ஐரோப்பாவிலேயே மாதவிடாய் விடுப்பினை அமல்படுத்திய முதல் நாடாகவும், இதை ஏற்கனவே சட்டமாக்கியுள்ள மற்ற சில நாடுகளில் ஒன்றாகவும் விளங்கும்…

உலகின் மற்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்புகள்

ஜப்பானில், மாதவிடாய் விடுப்புக்கான உரிமை 1947 முதல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பில் இருக்கும் ஒரு ஊழியரை வேலை செய்ய கட்டாயப்படுத்த முடியாது. மறுபுறம், இந்த வகை விடுப்புக்கு எடுக்கக்கூடிய நாட்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. ஆனால் இது பொதுவாக சம்பளமில்லா விடுப்பாகவே இருக்கிறது.

தென் கொரியாவில், ஊழியர்கள் மாதத்திற்கு ஒரு நாள் ஊதியமற்ற.மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தைவானில், பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாளும் ஆண்டுக்கு மொத்தம் மூன்று நாட்கள் என்ற வரம்பிற்குள்ளும் மாதவிடாய் விடுப்புக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விடுப்பு எடுத்தாலும், அது பிணி விடுப்பாகவே கணக்கிடப்படும்.

வடக்கு ஆப்பிரிக்காவில் ஜாம்பியா 2015 ஆம் ஆண்டில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. வலிமிகுந்த மாதவிடாய் ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலோ மருத்துவ சான்றிதழ் இல்லாமலோ கூட ஒரு மாதத்தில் கூடுதல் நாட்கள் விடுப்பு எடுக்க அந்த சட்டம் அனுமதித்துள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech