வெர்சய் பகுதியில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு வந்த அழைப்பையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியபடி தனது தொண்டையில் வாள் முனையை வைத்து நின்றுக்கொண்டிருந்த நபரிடம் வாளை கீழே போடும்படி பல முறை வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாத அந்நபர் திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியுடன் காவல்துறையினரை நோக்கி நடந்து வரவே காவல்துறையினர் தங்களிடமிருந்த மின் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர். கைது செய்யப்பட்டவுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினருக்கு கை விரல்கள், கால், நெஞ்சு பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.