பிரான்சின் Haute-Savoie மாவட்டத்திலுள்ள ருமிலியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் இரு குழந்தைகளின் உடல்கள் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி கண்டெடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி குழந்தைகளின் தாயாரே காவல்துறையினரை அழைத்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவர்கள் வீட்டிலிருந்து மிக அழுகிய நிலையிலிருந்த இரு குழந்தைகளின் உடல்களை கண்டெடுத்துள்ளனர்.
குறைவான வருமானம் கொண்டோருக்கான பிரெஞ்சு அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (HLM) நடைபெற்றுள்ள இச்சம்பவம் குடியிருப்புவாசிகளின் நடுவே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த வீடு காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை முதற்கட்ட விசாரணையினை மேற்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.