Gironde மாவட்டத்தின் CAF பயனாளிகள் சுமார் 10,024 பேரின் பெயர், முகவரி கொண்ட தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் உள் நிர்வாக பயிற்சியை வழங்கிய வேறொரு நிறுவனத்தினால் இச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் முதன்மை ஊடகத்திற்கு அளித்த தகவலில் CAFஇன் உள்நிர்வாக பயிற்சிக்காக வெகு சில ஊழியர்களுக்காக மட்டுமே பொது வெளி இணையத்தில் பதியப்பட்டிருந்த அந்த கோப்பு, பயிற்சி முடிந்த பின்னரும் பயிற்சி வழங்கிய வெளி நிறுவனத்தால் தவறுதலாக அங்கேயே விடுபட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், அந்த கோப்பில் பெயர், தொலைபேசி எண், மின்னன்ஞசல், பயனர் எண் போன்ற விவரங்கள் என்றும் கூறியுள்ளது. இருப்பினும், அதில் பயனர் பிறந்த தேதி, குடும்ப வருவாய், அளிக்கப்பட்ட உதவித்தொகை குறித்த விவரங்கள் இருந்ததாக அறியவருகிறது.