பாரிஸ்: Canal de l’Ourcq அருகிலிருந்து 246 பேர் வெளியேற்றம்

by Special Correspondent
0 comment

Ile-de-France : காவல்துறையினரும், உள்ளூர் நிர்வாகமும் இணைந்து கால்வாயின் அருகில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த வீடற்ற 246 பேருக்கு புகலிடம் அளித்துள்ளனர்.

பாரிசின் 19வது வட்டத்திலுள்ள Canal de l’Ourcq-கின் கரையோரம் அவர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர்.

அவர்களில் 67 பேர் ile-de-France பகுதியிலும், 179 பேர் வேறு மாநிலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளானர்.

அவர்களுடைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சமூக மற்றும் சுகாதார உதவிகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது போன்ற நடவடிக்கை எடுப்பது இது நான்காவது முறையாகும். 

ஜனவரி 2023 முதல் இதுவரை மொத்தம் 708 பேர் புகலிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அரசு புள்ளி விவரங்களின்படி மொத்தம் 19 புகலிட நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. அதில் 6,688 பேர் பயன்பெற்றனர்.

ஜனவரி 26-இல் பாரிசில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 105 சிறார்கள் உட்பட 3,015 பேர் தங்குமிடம் இல்லாமல் உள்ளனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech