QatarGate ஐரோப்பிய நாடாளுமன்ற ஊழல்: இருவர் கைது

by Editor
0 comment

உலக கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதற்காக பணம் பெற்றுக்கொண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்க் தரபெல்லா மற்றும் இத்தாலியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரியா கொசொலினோ ஆகியோர் இந்த கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

இது குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க இரண்டு மாதங்களில் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்த நிலையில், கத்தார் மற்றும் மொராக்கோ சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற ஊழல் குறித்த சந்தேக விசாரணையில் பெல்ஜியம் எம்.இ.பி மார்க் தாராபெல்லா வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் ஏதும் கிடைக்காத நிலையில், மார்க் தரபெல்லா மேயராக இருக்கும் அந்தினே நகரத்திலுள்ள வங்கி லாக்கர் ஒன்றில் சோதனை நடத்தவிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேக்க ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இவா கைலியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பைகளில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.

QatarGate என்றழைக்கப்படும் இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெல்ஜியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Pier Antonio Panzeri என்பவர் விசாரணையின் போது தனகு 120,000 யூரோக்கள் முதல் 140,000 யூரோக்கள் வரை தரப்பட்டதாக கூறியுள்ளார். முன்னதாக அவரது வீட்டிலிருந்து 600,000 யூரோக்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech