சனிக்கிழமை இரவு L’Isle-Adam (Val-d’Oise)-இல் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த ஏ.டி.எம்மை தாக்கி உடைத்து 130000 யூரோக்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
L’Isle-Adam (Val-d’Oise)-இல் இருந்த Banque Populaire ATM-ஐ பல பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று தாக்கி கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
27 முதல் 48 வயது வரை உள்ள ஆறு பேர் கொண்ட இக்கும்பல் இக்கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளது. ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் ஏற்கனவே ஏ.டி.எம். தாக்குதலில் சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார்.
பாரிஸ் பகுதியில் அண்மைக் காலங்களில் ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன.
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி Tournan-en-Brie (Seine-et-Marne)-யில் ஏ.எடி.எம்மை உடைக்க முயன்ற தென்னமெரிக்கர்கள் மூவரை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.