124
ஐரோப்பிய கோல்டுபின்ச் (European goldfinch) எனப்படும் அரிய வகை பறவைகளை கடத்த முயன்ற நபருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மோன்பில்லியர் நீதிமன்றம் கடந்தாண்டு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
ஆனால், பிரெஞ்சு பல்லுயிர் அமைப்பு தலையிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிறைத்தண்டனை பெற்றுத்தந்துள்ளது.
பறவைகளை பிடித்த இரு பூங்காக்களுக்குள் நுழைய அந்நபருக்கு நான்காண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அரிய வகை பறவைகள் கடத்தப்படுவதற்கு முக்கியத்துவம் அளித்து நீதிமன்றம் வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளது முன்மாதிரி நிகழ்வு என்று பிரெஞ்சு பல்லுயிர் அமைப்பு தெரிவித்துள்ளது.