Montpellier (Hérault)-வில் நடைபெற்ற ஒரு தேடுதல் நடவடிக்கையில் 68 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. HLM எனப்படும் அரசின் வீட்டு வசதி குடியிருப்பில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதால் அவ்வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
33 வயதுள்ள ஆண் ஒருவரும், 28 வயதுடைய பெண் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 68 கிலோ கஞ்சாவோடு மேலும் 25 கிராம் கொகைனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ள சந்தையில் இவற்றின் மொத்த மதிப்பு 170,000 யூரோக்கள் ஆகும். அதோடு, 6.35 மிமி கைத்துப்பாக்கியும், 4450 யூரோ பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. சமூக குடியிருப்பு எனப்படும் HLM வீட்டிலிருந்து போதைப்பொருள் வைத்திருந்தவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ACM நிறுவனம் தெரிவித்துள்ளது.