ஓய்வூதியத்திற்கு எதிரான போராட்டத்தில் மூன்று CRS காவலர்கள் மீது எரிகுண்டு (Molotov Cocktail) வீசப்பட்டு தீப்பற்றிய சம்பவத்தில் காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சனிக்கிழமையன்று ரேன்னில் (Rennes) நடைபெற்ற ஓய்வுதியதிற்கு எதிரான போராட்டத்தில் CRS எனப்படும் கலவர தடுப்பு ஆயுதப்படை காவலர்கள் மூவர் மீது மர்ம நபர்களால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் தீப்பற்றி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் மீது தீப்பற்றியதும் அருகிலிருந்தவர்களும் தீயணைப்பு வீரர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். பின் தீக்காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 23 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.