ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல் – ஒருவர் பலி

by Editor
0 comment

ஸ்பெயினில் இரு வேறு தேவாலயங்களில் நபர் ஒருவர் அங்கிருப்பவர்களை வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஒருவர் பலியானார், மூவர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக அந்நபர் La Palma-வில் இருந்த பாதிரியாரை வெட்டிக்கொன்றுள்ளார்.

அடுத்து, San Isidro தேவாலயத்தில் இருந்த பாதிரியாரையும் வாளால் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் 25 வயதானவர் என்றும், மொரோக்கா நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும், விசாரணைக்கு பின்பே தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech